மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 09:08 pm
deadly-friends-who-rape-girl-student

கர்நாடகா மாநிலம் உள்ள கொடிஹள்ளி என்ற இடத்தில் விடுதியில் தங்கி மாணவி ஒருவர் பயின்று வருகிறார். நேற்று இரவு விடுதியில் தனியாக இருந்த மாணவியை அவரது நண்பர்கள் அபினவ் மற்றும் நிகில் ஆகிய இருவரும் கோரமங்கலா பகுதியிலுள்ள ஒரு பப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நண்பர்கள் இருவரும் வற்புறுத்தியதால் அந்த மாணவி மது அருந்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அதிகளவில் மது குடித்ததால் வாந்தி எடுத்து தனத விடுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு தள்ளாடியதாக கூறப்படுகிறது.

இதனை சாதகமாக்கி கொண்ட இருவரும் அந்த மாணவியை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் மறுநாள் காலையில் தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர் மாணவியின் நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கல்லூரி மாணவ மாணவிகள் போதைக்கு அடிமையாகுதல், இரவு நேரங்களில் பப்பில் ஆட்டம் போடுதல் என கட்டுப்பாடின்றி இருக்கும் பெங்களூரில் இளம் பெண்ணை இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close