காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10% தள்ளுபடி

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 07:36 am
download-kavalan-app-gett-10-percent-discount-in-madurai-hotel

வெளியில் சென்று வரும் பெண்களுக்கு வர வர பாதுகாப்பு குறைந்துக் கொண்டே போகிறது. செயின் பறிப்பு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கொலை என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து 'காவலன்' என்ற செயலியை காவல்துறையால்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கல்லூரி மாணவிகள்,பணியாற்றும் பெண்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினரும் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். இது வரை சுமார் 5 லட்சம் பெண்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                               

இந்நிலையில்,  மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் தன்னுடைய உணவகத்தில் அறிவிப்புப் பலகை ஒன்று வைத்துள்ளார். காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும், இவர் உணவகத்திற்கு வரும் பெண்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.இவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close