குடும்பத் தகராறு.. வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை..!

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 06:24 am
wife-murder-husband-arrest-in-chennai

சென்னையில் மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவாகிய கணவரை உறவினர்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனி 5-வது தெருவில் பிரசாத்(36), உஷா(30) தம்பதியர் . 5 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தனர். இத்தம்பதியர் அதே பகுதியில் மாவு கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் உஷாவின் சகோதரி செல்போனில் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது உஷாவின் போனை பிரசாத் மற்றும் அவரது உறவினர்கள் எடுத்து பேசியுள்ளனர். பல முறை முயற்சி செய்தும்  உஷா தூங்குவதாகவும், இல்லையெனும் கூறி வந்ததால் சந்தேகம் அடைந்த உஷாவின் சகோதரி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். 

அதன்படி அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் உஷா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசாத்துக்கும் உஷாவுக்கும் வழக்கம்போல் சண்டை வந்ததும், ஆத்திரத்தில் பிரசாத் வாஷிங்மிஷினில் இருந்த டியூப்பை எடுத்து மனைவி உஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் தனது மகளை ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பிரசாத் தலைமறைவாகினார். எனினும் அவரது இருப்பிடம் அறிந்த அவரது உறவினர்களே பிரசாத்தை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மனைவியை கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close