பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்! பொறி வைத்து பிடித்த போலீசார்!

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 03:07 pm
kidnapped-child-rescued-in-chennai

சென்னையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை போலீசார் அதிரடியாக மீட்டதுடன் குழந்தையை கடத்திய இளம் பெண்ணையும் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜானே போஸ்லே, ரந்தோஷ் தம்பதி. இவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, கடந்த 12ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக் கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்று விட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தம்பதியினர், தங்களது குழந்தையைக் காணவில்லை என்று புகார் செய்தனர். போலீசார் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகளை உடனடியாக ஆய்வு செய்த போது குழந்தையை அந்தப் பெண் தனியே கடத்திச் செல்வது தெரிந்தது.

இதையடுத்து பூக்கடை காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன குழந்தையைத் தேடினார்கள்.  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் செல்லும் வழி முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் அந்தப் பெண், குழந்தையுடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்து எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வரை செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அந்த பெண் கடத்திய குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. அதனை வைத்து போலீசார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த பெண் கடத்திய குழந்தையுடன் வந்து போது மடக்கி பிடித்தனர். பிடிபட்டது தன்னுடைய குழந்தை தான் என்று, குழந்தையை இழந்த பெற்றோர்களும் வந்து அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்கள்.  இதனையடுத்து குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close