4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்..  

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 07:37 am
an-old-man-who-had-sex-with-a-girl

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமதாஸ், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், தமது கடைக்கு வரும் சிறுமிகளிடம் விளையாடுவது போன்று உடலில் அங்குஇங்கு கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ்.

இதுகுறித்து அக்குழந்தை தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close