ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை!

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 11:19 am
class-7-girl-student-raped-teachers-maharashtra

மகாராஷ்டிரா நந்தீத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, ஆசிரியர்கள் இருவர் ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த மாணவியை குறிவைத்த ஆசிரியர்கள் ஆபாச படம் பார்க்க வைத்து வாய்ப்பு கிடைக்கும்போது பாலியல் தொந்தரவு அளித்து வந்தனர்.

ஒருநாள் அந்த மாணவியை பள்ளியில் தனி அறையில் அடைத்து வைத்து ஆசிரியர்கள் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் 7 மாதங்களுக்கு முன்பு நடந்தாலும் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மறுநாளே பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றார். ஆனால், அதனை போலீசார் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் வெளியேதெரிய ஆரம்பித்து பெரிதாவதை உணர்ந்த போலீசார் கடந்த 18ஆம் தேதி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில், 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனினும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 ஆசிரியர்கள் இன்னும்  தலைமறைவாக உள்ளதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close