5 வயது சிறுமியை சீரழித்த இரு இளைஞர்கள்.. பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 08:35 am
pocso-act-convict-assaults-lady-journalist

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லி காந்தி நகர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த சிறுமி மயக்கம் அடைந்து கிழே விழுந்ததால், உயிரிழந்துவிட்டதாக கருதி இருவரும் தப்பியோடினர். எனினும் மறைவான இடம் என்பதால் சுமார் 40  மணிநேரம் கழித்தே சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறினர். எனினும் இக்கொடூரத்தில் ஈடுபட்ட மனோஜ், பிரதீப் ஆகியோர் என்பதையும் இருவரும் டெல்லியை விட்டு தப்பியோடியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில் மனோஜை முஸாபர் நகரிலும், பிரதீப்பை தர்பாலிகாவிலும் டெல்லி போலீஸ் கைது செய்தது. அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இருவரும் தற்போது டெல்லி காகர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்கள்.

இருவரையும் பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி எதிரில் இருந்த பெண் உட்பட மூன்று பத்திரிகையாளர்களை முகத்தில் குத்தினான். அதன் பிறகு போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close