சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 09:45 am
youth-sentenced-to-life-imprisonment-for-raping-minor-girl

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த குன்னத்தூர்புதூரை சேர்ந்த 16 வயது சிறுமி, 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்த ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த செம்மாண்டபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் (27),  கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி ஓதிமலை என்ற இடத்துக்கு கடத்தி சென்றார். அங்குவைத்து சதீஸ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூற அவர்கள் அளித்த புகாரின்படி அன்னூர் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதமும் முடிந்த நிலையில், குற்றவாளி சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். இதனையடுத்து சதீஸ்குமார் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close