பொங்கல் தகராறில் பழிக்குப் பழியாக ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை..

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 10:18 am
youth-abducted-and-killed-in-revenge

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராம்குமார் (24). ரவுடியான இவர் மீது, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ் காவல்நிலையங்களில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்த இவர்  நேற்று கோவளம் அருகே உள்ள கல்குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. பொங்கல் பண்டிகையன்று குடிபோதையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கும், கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உடைந்த பீர் பாட்டிலால் ராம்குமார் தாக்கியதில் பிரேம்குமார் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பான புகாரில் ராம்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மயிலாப்பூரில் டீக்கடை ஒன்றில் ராம்குமார் இருப்பதை அறிந்த பிரேம்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் கடத்தினார். தன்னை பாட்டிலால் குத்திய இடத்திற்கே ராம்குமாரை அழைத்து சென்று பொது கழிவறையில் வைத்து சரமாரியாக வெட்டி அங்கே உடலை வீசிச் சென்றனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டோவில் வந்த பிரேம்குமார் மீண்டும் ராம்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்று உயிரிழந்தாரா என்று உறுதி செய்த பிறகு கோவளம் அருகே உள்ள கல்குட்டையில் உடலை வீசிட்டு நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார் என விசாரணை நடத்திய போலீசார் தெரிவிக்கின்றனர். புகாரின்படி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்பு (24), பிரேம்குமார் (25), ஆட்டோ டிரைவர் சிவமணி (24), அப்துல் ரஹிம் (24), அஸ்மத் (23), சுபான் (22), கார்த்திக் (25), ரஞ்சித் (22), வினோத் (24), ஜெகன் (29), அருண் (30) ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில் அருண், ஜெகன், அப்பு ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் மற்றவர்களை தேடி வருகின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close