சென்னையில் ஒரே நேரத்தில் ஒரே பள்ளி மாணவிகள் 4 பேர் கடத்தல்..?

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 10:57 am
4-school-student-missing-in-chennai

பொங்கல் பண்டிகை முடிந்து வழக்கம்போல் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளி தொடங்கியது. இதில் சென்னை அடுத்து ஆவடியில் உள்ள காமராஜர்  பெண்கள் மேல்நிலைப் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மட்டும் நேற்று  வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறையினர் உயர் எச்சரிக்கை கொடுத்து அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகள் ஒன்றாக விட்டைவிட்டு வெளியேறினரா?, யாரேனும் கடத்திச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற 4 மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close