கள்ளக்காதலுக்கு இடையூறு? பெற்ற மகளுக்கு மதுவை புகட்டிய கொடூர தாய்.! ரத்த வாந்தி எடுத்த சிறுமி

  முத்து   | Last Modified : 21 Jan, 2020 11:31 am
mother-tortured-baby-giving-wine

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியை சேர்ந்த நந்தினி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தனது மூன்றரை வயது மகள் மகள் நயனாஸ்ரீயையும் பராமரித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேரந்த இளைஞர் அசோகன் என்பவருடன் நந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். அப்போது நந்தினியை மதுபோதை பழக்கத்திற்கு அடிமையாக்கி இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிது. 

இந்நிலையில் வீட்டில் நண்பர் அசோகனுடன் மது அருந்திய நந்தினிக்கு போதை தலைக்கேறியுள்ளது. அப்போது தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த மகள் நயனாஸ்ரீ மீதான ஆத்திரத்தில், அவளை உறங்கச் செய்வதற்கு மகளுக்கு தானே கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். மேலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் போதையில் இருந்த நந்தினியிடமிருந்து குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்தனர். மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே குழந்தை நயனாஸ்ரீ ரத்தவாந்தி எடுத்ததால், மேல்சிகிச்சைக்காக ஒசூர் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். புகார் தொடர்பாக சிறுமியின் தாய் நந்தினி, அவரது ஆண் நண்பர் அசோகன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close