ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்!!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 12:34 pm
rajini-vs-thiruma

பெரியார் பற்றி ரஜினி, துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் முன்வைத்த கருத்துக்கள் தான் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினி. 

துக்ளக் விழாவில் தான் பேசியது குறித்து மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது என்றும், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் தவறாக பேசவில்லை’ என்று கூறிய ரஜினி, தனது கையில் வைத்திருந்த ‘அவுட்லுக்' பத்திரிகையைக் காட்டி, நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றார்.

ரஜினி தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து திருமாவிடம் கேட்ட போது, “பெரியார்... ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் அவதாரங்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆனால், அவர் நாகரிகமான அரசியலைக் கையாண்டார். அப்படிப்பட்டவர் பற்றித் தான் ரஜினிகாந்த், தவறாக பேசியுள்ளார். ரஜினி சொல்லும் சம்பவம் நடக்கவே இல்லை. ரஜினி கூறிய கருத்து வரலாற்று பிழை என்று எடுத்து கூறினோம். அவர் வருத்தம் தெரிவிப்பதும் வருத்தம் தெரிவிக்காததும் அவரது உரிமை.  நாங்கள் அதனை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர் வருத்தம் தெரிவிப்பது தான் நாகரிகமான அரசியல். பெரியார் ராமர், கிருஷ்ணரை அவமதித்தார். அவரே அடித்தார் என்று கூறுவது வரலாற்று தவறு. சங்கபரிவார் அமைப்புகள் கூறுவதை ரஜினி எதிரொலிப்பது மிகவும் தவறானது என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close