10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து! கோடிக்கணக்கில் சேதமான துணிகள்!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 01:54 pm
massive-fire-in-raghuveer-textile-showroom

குஜராத் மாநிலம் சூரத்தில் ரகுவீர் வணிக வளாகம் இயங்கி வந்தது.  10 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முதல் தளத்தில் இருந்த கடை ஒன்றில் தீ பற்றியுள்ளது, பின்னர் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவி, மொத்த கட்டிடமும் கொழுந்து விட்டு எரிந்து தீப்பிழம்பாக காட்சியளித்தது. பாலிஸ்டர் ரக ஜவுளி அதிகம் அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

                                             

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் இதே கட்டிடத்தின் 4-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் சேதம் விளைவித்தது குறிப்பிடத்தக்கது 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close