உண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார்! காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்! உதயநிதி பேட்டி!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 02:16 pm
udhayanidhi-talks-about-superstar-thuklak-issue

துக்ளக் விழாவில் தான் பேசியது குறித்து மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது என்றும், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் தவறாக பேசவில்லை’ என்று கூறிய ரஜினி, தனது கையில் வைத்திருந்த ‘அவுட்லுக்' பத்திரிகையைக் காட்டி, நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றார்.

ரஜினி, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய திமுக இளைஞரணி தலைவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ‘ரஜினி தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார்’ என்றார்.
மேலும், ‘ஏற்கனவே காவிரி விவாகரம் தொடர்பாக பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார்’ என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close