ரஜினியின் கருத்து பற்றி எச்.ராஜா ட்விட்டரில் பதில்!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 02:43 pm
h-raja-twitter-post-regarding-murasoli

துக்ளக் விழாவில் பெரியார் பற்றியும், முரசொலி பற்றியும் ரஜினி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினி, தான் கூறியது உண்மைதான். அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார். ரஜினி, மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதையடுத்து, தமிழக அரசியலில் மீண்டும் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

ரஜினியின் கருத்து பற்றி பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ரஜினி துக்ளக் இதழின் அசலை ரஜினி காண்பிப்பது தான் நேர்மையான செயலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், எச்.ராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில், ' ரஜினிகாந்த் பத்திரிகைச் செய்தியின் நகலைக் காட்டியதற்கு திகவினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள்'. என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close