ரஜினியின் பேச்சு எதிரொலி! போயஸ் கார்டனில் பரபரப்பு!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 06:00 pm
high-security-at-poes-garden

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்தும், முரசொலி பத்திரிக்கை பற்றியும் பேசிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது கருத்துக்களில் தவறுகள் ஏதும் இல்லை என்றும், தான் துக்ளக் விழாவில் பேசியதற்கு ஒரு போதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

ரஜினியின் இவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பிற கட்சியினர் வலியுறுத்திவரும் வேளையில், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி பேசியதும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும், இன்னும் சிலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். பின்னர், சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் போயஸ் கார்டன் பகுதிக்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். தற்போது, சென்னை போயாஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திடீரென போயஸ் கார்டனில் கூட்டம் கூடியதால் அந்த பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close