நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 07:58 pm
amalapaul-father-passes-away-today

தமிழ் திரையுலகில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், அதன் பிறகு ‘மைனா’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து கரம் பிடித்தார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில், இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டு பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பின்னர், நடிப்பில் முழு கவனம் செலுத்தி அமலாபால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ‘ஆடை’ இல்லாமல் சில காட்சிகளில் நடித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்த நடிகை அமலாபால், தற்போது ‘அதோ அந்த பறவை’ படத்தின் வெளியீட்டையொட்டி, அதன் பப்ளிசிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று நடிகை அமலாபாலின் தந்தை திரு.பால் வர்கீஸ் திடீரென மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3  மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகினர் நடிகை அமலாபாலைத் தொடர்பு கொண்டு தங்களது இரங்கல்களையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close