பள்ளி மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது 

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 06:38 am
youth-arrested-for-bocso-act

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர் நாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணும், அதேபகுதியைச் சேர்ந்த நந்தகுமார்(22) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து மாணவியை பல முறை நந்தக்குமார்  உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close