சூதாட்டத்திற்கு வட்டிக்கு பணம் வாங்கியவரை மனைவியுடன் சென்று தாக்கிய கந்துவட்டி கும்பல்..

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 06:50 am
tirunelveli-kanthuvatti-suicide-attempt

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சீட்டு விளையாடும் பழக்கமுடையவர். அப்குதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டு என்ற பெயரில் சூதாட்டம் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக அதே ஊரை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரிடம் வட்டிக்கு 12,000 ரூபாய் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் கட்டியுள்ளார் ராமச்சந்திரன்.

இந்நிலையில் பணம் கொடுத்த சிவன்பாண்டி, தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்து ராமசந்திரனையும் அவரது மனைவியையும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமசந்திரன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close