3ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. நடுங்க வைக்கும் கொடூரம் 

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 10:20 am
girl-children-raped-and-killed-in-sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது 8 வயது மகள் பிரித்திகா அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி சிறிது நேரத்திற்கு பின் தோழிகளுடன் விளையாடச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை சுந்தரம் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அந்த ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் முட்புதர்களுக்கு நடுவே சிறுமி ஒருவர் ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். சிறுமி மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட சிறுமி காணாமல் போன சிறுமி பிரித்திகா என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தகவலறிந்து கிராம மக்கள், உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close