சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 07:29 am
100-years-old-in-birth-certificates-after-parents-refuse-to-bribe

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த பவான்குமார் என்பவர் தனது மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். 2 மாதங்களுக்கு முன்பு 2 வயது மகன் சான்கெட், 4  வயது மகன் ஆகியோருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க கோரியிருந்தார். அப்போது, கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.500 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், லஞ்சம் கொடுப்பதற்கு பவான்குமார் மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஜூன், 13, 2016 என சான்றிதழில் குறிப்பிடுவதற்கு பதிலாக ஜூன் 13, 1916 என்றும் ஜனவரி 6, 2018ம் ஆண்டு என்பதற்கு பதிலாக ஜனவரி 6, 1918 என்றும் மாற்றி குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் 2 வயது சிறுவனின் வயது 102ஆகவும், 4 வயது சிறுவனின் வயது 104ஆகவும் பதிவானது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பவான்குமார் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட கிராம மேம்பாட்டு அதிகாரி, தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பெரெய்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருவரும் மீதும் முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close