நள்ளிரவில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் அராஜகம்!  கண்டுக் கொள்ளாத காவல்துறை!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 07:15 pm
jewellery-cellphone-robbery-near-peerkankaranai-in-chennai

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பீர்க்கங்கரணை பகுதியில் வசிப்பவர் சுசித்ரா.  இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டி  சுசித்ராவிடம் இருந்த தாலி சங்கிலி, 2 செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

விசாரணையில் சுசித்ரா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை நோட்டமிட்டு இக்கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதே போல் பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசிக்கும் உஷா என்பரிடம் கத்திமுனையில் தங்க நகை, செல்போன்கள் மற்றும் பணத்தை ஒரு கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

 

முடிச்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close