உஷார்!! இதையெல்லாம் செக் பண்ணுங்க! சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 07:01 pm
eight-kerala-tourists-found-dead-in-nepal-hotel-room

ரிசார்ட் ஒன்றின் அறையில் எரிவாயு கசிந்து 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 சுற்றுலா பயணிகள் நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். இதில் ஒரு அறையில் 8 பேரும், மற்றொரு அறையில் 7 பேரும் தங்கியுள்ளனர். தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால் விடுதியின் அறையில் வெதுவெதுப்பாக்க கேஸ் ஹீட்டரை  பயன்படுத்தினர்.

இவர்கள் தங்கிருந்த அறையின் கதவு, ஜன்னல் அனைத்தும் உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. அப்போது கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் அனைவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அறையில் இருந்து புகை வெளியேறியதால் ரிசார்ட் ஊழியர்கள் அங்கு விரைந்து அறையின் கதவை திறந்து அனைவரையும் மீட்டனர். பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அவர்களின் உடல் கேரளாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

எப்போது வெளியூர் பயணங்களில், குறிப்பாக தங்கும் இடங்களில் உள்ள மின் சாதனங்களில் அவை பழுதடைந்திருக்கிறதா, பாதுகாப்பானது தானா? என ஒரு முறைக்கு இரு முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தங்களது தங்குமிடங்களில் தங்க வருபவர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கவர்ந்திழுக்கும் பெரும்பாலான ரிசார்ட்கள் தங்குபவர்களின் பாதுகாப்பை பற்றி உறுதி செய்வதில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close