திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன்! அதன் பிறகு செய்த காரியம்..!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 07:13 pm
married-woman-assaulted-abused-by-ex-lover-in-front-of-her-son

குஜராத்தின் வதோதரா பகுதியில் உள்ள தபோய் டவுனில் 27 வயது திருமணமான பெண் ஒருவரை, அவரது பழைய காதலர், தன்னை சந்திக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தனக்கு திருமணம் முடிந்து கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறி முதலில் மறுத்த அப்பெண்ணை, அவரது காதலர் மிரட்டவே அவர் பயந்து போய், பழைய காதலனை பார்க்கச் சென்றுள்ளார். ஆனாலும் பழைய காதலன் வன்முறையுடன் நடந்து கொண்டு விடக் கூடாது என்பதற்காக, தனது மகனையும் இப்பெண் கூடவே கூட்டிச் சென்றுள்ளார். ஏதோ திட்டம் போட்ட பழைய காதலன் ஆள் நடமாட்டம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அப்பெண்ணை பழைய காதலன் பலவந்தமாக தூக்கிச் சென்று மகனின் கண் முன்னாலேயே  வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அப்பெண் கதறிக் கூச்சலிட்டு கத்தியுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லை என்பதால் காப்பாற்றவும் யாரும் வரவில்லை. எனினும் பழைய காதலனின் ஆசைக்கு இணங்க மறுத்து அப்பெண் கடுமையாக போராடியுள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணின் அந்தரங்க பாகங்களை சிதைத்துள்ளார். பின்னர், தாய், மகன் இருவரையும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்கும் அனுமதித்துள்ளார். அங்கிருந்து மகனுடன் தப்பிய  அப்பெண், தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதன்படி அவர்கள் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் பழைய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close