கள்ளக்காதலியுடன் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட கணவர்! கதறியழும் மனைவி!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 07:05 pm
wife-complained-husband-to-police

டிக்டாக் தோழியுடன் கணவர் தலைமறைவாகி விட்டதாகவும்,  தனது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மனைவி கடலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா ஆகியோருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜசேகர் மது அருந்தி விட்டு, மனைவி சுகன்யாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரில் இருவரையும் அழைத்து சமரசம் செய்த போலீசார் ராஜசேகரை எச்சரித்து அனுப்பினர். இதனிடையே  டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார். 

நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட தனது கணவரின் போக்கு முற்றிலும் மாறியதை அறிந்து சுகன்யா கவலையில் ஆழ்ந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் இதுவரை வீடு திரும்பவில்லை என்கிறார் சுகன்யா.

இது தொடர்பான புகாரில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிநயாவுடன் ராஜசேகர் மாயமானது தெரிய வந்தது. காணாமல் போன கவிநயா மற்றும் ராஜசேகர் திருமணம் செய்து ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்து கொண்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர் என சுகன்யாவிடம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி சுகன்யா கணவர் ராஜசேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பங்களை சீரழிக்கும் டிக் டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close