முடியுமா? முடியாதா? தொலைபேசியில் வாக்குவாதம்.. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை!!!

  முத்து   | Last Modified : 22 Jan, 2020 11:19 am
army-mans-wife-committed-suicide

பணி செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி, ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஒட்டன்சத்திரத்தில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரரான லட்சுமணன் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரிக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. விடுமுறை முடிந்து ராணுவ வீரர் லட்சுமணன் மீண்டும் காஷ்மீருக்கு பணிக்கு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து தன்னையும் அங்கு அழைத்துச் செல்லுமாறு மனைவி கூறியுள்ளார்.

ஆனால், மனைவியை லட்சுமணன் கூட்டி செல்ல முடியாத நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த ஈஸ்வரி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இளம்பெண்ணின் இந்த முடிவு இருவீட்டார் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்கொலை முடிவுக்கு அவரது கணவரான ராணுவ வீரரே காரணம் என கூறி, பெண்ணின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லட்சுமணன் குடும்பத்தார் 2 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை கொண்டுவந்ததால் கணவனுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாகவும் இதற்கு லட்சுமணன் உடந்தை எனவும் புகார் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறுதியளித்து லட்சுமணனின் பெற்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close