திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலனைப் போட்டுத் தள்ளிய காதலி! புது காதலன் கைது!

  சாரா   | Last Modified : 22 Jan, 2020 06:36 pm
illegal-affair-kills-a-man

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18 ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். 

                                                      

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் ஆரணி சைதாப்பேட்டையை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி எனும் பெண்னை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரிய வந்தது. இவர்களது காதல் கடந்த 8 ஆண்டுகளாக வளர்ந்து வந்த நிலையில், பல முறை திருமணம் செய்து கொள்வதற்கு வற்புறுத்திய போதும், திருமணத்திற்கு மறுத்த வந்த கிருஷ்ணவேணி ஒரு கட்டத்தில், சுரேஷை விட்டு விட்டு, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் எனும் வாலிபருடன் பழகியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் கிருஷ்ணவேணியும், அஜித் குமாரும் அவரை ஏமாற்றி வரவழைத்து கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

 இதையடுத்து அஜித்குமாரை நேற்று கைது செய்த போலீசார், கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர். கிருஷ்ணவேணியை தேடி வரும் நிலையில், கைதான அஜித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விட்டு வேலூர் சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close