மாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து..! அண்ணன் வெறிச்செயல்..

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 06:34 am
omalur-whatsapp-love-student-attack

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், சேலம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். ஹரிஹரன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், ஹரிஹரன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களும் ஹரிஹரனை கண்டித்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, தற்போது இருவரும் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் அண்ணன் சச்சின், மது அருந்திவிட்டு, ஹரிஹரனை அருகேயுள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார். மேலும், எனது தங்கையிடம் வாட்ஸ் அப் மூலம் பேசுவாயா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஹரிஹரன் பெற்றோர் மற்றும் உறவினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஹரிஹரனின் உறவினரான முரளிதரன் என்பவர் சச்சினிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் சச்சின் தனது பைக்  சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில், ஹரிஹரன், அவரது உறவினர் முரளிதரன் ஆகிய இருவருக்கும் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close