2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்!!!

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 08:24 am
rs-50-thousand-family-2-girls-on-govt-scheme

பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் வழங்கும் 'பெண்களுக்கான முதிர்வுதொகை' என்ற திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்க சமூகநலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 1992-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்காக குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ரூ.78,000க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற குறிப்பிட்ட பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதன் முதலீடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2011 ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.22,200மும், 2 குழந்தை இருந்தால் தலா ரூ.15,200-ம் வழங்கப்பட்டு வந்தது.   2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையாக இருந்தால் ரூ.50 ஆயிரம் ரூபாயாகவும், 2 குழந்தைகள் இருந்தால் தலா 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.  

தற்போது இந்த தொகை மேலும் உயர்த்தப்பட்டு 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. முதிர்வு தொகை என்ற திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சமூகநலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close