மனைவியை ஃபாலோ செய்த 6 ஆயிரம் பேர் ... ஆத்திரத்தில் கணவன் வெறி செயல்..!

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 08:28 am
man-murders-wife-her-excessive-use-facebook

தன் மனைவிக்கு ஃபேஸ்புக்கில் 6000 பேர் ஃபாலோயர்ஸ்ஸாக இருப்பதை தெரிந்து கொண்ட இளம் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் அரங்கேறிய கொடுமை பலரையும் அதிரவைத்திருக்கிறது. அஜஸ் முகமது கான் என்பவருக்கும் 'நைனா மங்ளானி' என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் தனிகுடித்தனம் இருந்திருக்கிறார்கள். காதல் திருமணம் என்றாலும் 'நைனா மங்ளானி' நாள் முழுக்க ஃபேஸ்புக் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவாராம். இதனால் தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

ஒரு நாள் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தப்போது ஃபேஸ்புக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்திற்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். அவர்களோடு ஜாலியாக அரட்டையும் அடித்திருக்கிறார். அதனையும் பார்த்து கோபம் கொண்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து நைனா மங்ளானி கோவித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டாராம். மேலும் சந்தேகப்படும் கணவருடன் வாழ முடியாது என்பதால் விவாகரத்து வேண்டும் என அப்பெண் உறுதியாக கூறியுள்ளார். ஆனால் அஜஸ் முகமது விவகாரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் இழுத்தடித்தபடியே இருந்திருக்கிறார். 

இந்த நிலையில்தான் கடந்த 19ஆம் தேதி காலையில் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் பிரச்சினைய பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அன்பாக பேசியுள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் அழைத்துள்ளார். இதனை நம்பி அடுத்த நாள் காலையில் பெற்றோர் வீட்டில் இருந்து சென்ற நைனா மங்ளானி வீடு திரும்பவில்லை. இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். மனைவி அவ்வப்போது மொபைலை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்திருக்கிறார். இதனால், ஆத்திரத்தின் எல்லைக்குப் போன அஜஸ் டெல்லி-ஜெய்ப்பூர் ஹை வேய்ஸ்ஸில் ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தனது மனைவியை கொடூரமாகத் தாக்கியும், அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தில் கல்லைக் கொண்டு அடித்தும் கொலை செய்திருக்கிறார்.

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பக்கம் வந்தவர்கள் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதைப் பார்த்து போலிஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக அஜஸ் முகமதுவை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கனவே குடும்பங்களை சீரழிக்கும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுபோன்ற சமூக வலைத்தளங்களால் இன்னும் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட உள்ளதோ..? 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close