விடுங்கடா... எய்ட்ஸ் இருக்கு!! ஓடும் ரயிலில் கற்பழித்த இளைஞர்கள்! பெண்களின் பரிதாப நிலை!?

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 02:34 pm
men-abused-22-yr-old-hiv-survivor-and-took-video-in-train

பீகாரில் ரயிலில் கூட்டமில்லாத பெட்டியில் பயணம் செய்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஓடும் ரயிலில் இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் பகுதியில் வசித்த வரும் 22 வயது பெண் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வரும் சம்பவத்தன்று, வழக்கமான சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ரயில் மூலம் வீடு திரும்பியுள்ளார். இரவு 11.50 மணியளவில் பபுரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்ற போது அந்த கம்பார்ட்மென்ட்டில் மொத்தமே 5 பேர் தான் இருந்துள்ளனர். இப்பெண்ணும் 4 இளைஞர்களும் பயணம் செய்தனர்.

சிறிது தூரம் அப்பெண்ணை முறைத்தப்படியே பயணம் செய்த இளைஞர்கள் திடீரென அந்த பெண் மீது பாய்ந்தனர். ஓடும் ரயிலில் அந்த கம்பார்ட்மெண்ட்டிலேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்துள்ளனர். ரயில் பாபுவா சாலை ஸ்டேஷனை அடைந்தபோது எப்போதும் போல கம்பார்ட்மெண்ட்டை பரிசோதனை செய்வதற்காக,  காவலர் ஒருவர் கதவைத் திறக்க, அங்குதான் இந்த இளைஞர்கள் அப்பெண்ணை பலாத்காரம் செய்துகொண்டிருந்துள்ளனர். இன்னும் 2 பேர் அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளனர். 

காவலரைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓட, வீரேந்திர பிரகாஷ் சிங், தீபக் சிங் என்கிற 2 பேரை பிடித்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்ட பெண், தான் மணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், கயா எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்துக்கு வந்ததாகவும், திரும்பி வரும் போது இப்படி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அப்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்படுகிறது.     

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close