விடுதியில் செக்ஸ் சித்திரவதை! 11 மாணவர்கள்.. 3 ஊழியர்கள் கைது! பகீர் கிளம்பும் சம்பவம்!

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 03:55 pm
11-students-3-staffers-arrested-teen-commits-suicide

மகாராஷ்டிராவில் விடுதியில் தங்கியிருந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்துள்ள கொடூரச் சம்பவத்தை அடுத்து 11 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். சந்திரபூரில், கடந்த 18ம் தேதி அன்று 12ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த மாணவனின் மரணம் பற்றிய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துக் கொண்ட மாணவனை சக மாணவர்களும், பள்ளி நிர்வாக ஊழியர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ந்த பெற்றோர் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அம்மாணவனை இந்த முடிவுக்கு தூண்டியதற்காக 11 மாணவர்களும் 3 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close