தென்காசியில் குழாயடி சண்டையில் பெண் கொலை!

  முத்து   | Last Modified : 23 Jan, 2020 05:14 pm
woman-beaten-to-death-in-water-crisis-shocking-incident

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சேர்ந்தமரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி வியாகம்மாள் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீமராயப்பன் என்பவருக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பிடிக்கும்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த சீமராயப்பன் அங்கு சென்று வியாகம்மாளை உருட்டுக்கட்டையால் சராமரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்தோணி வியாகம்மாள் நிகழ்விடத்திலேயே சரிந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சீமராயப்பனை தேடி வருகின்றனர். தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான மோதலில் பெண் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close