'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...

  முத்து   | Last Modified : 27 Jan, 2020 09:43 am
chennai-woman-commits-suicide-after-4-months-of-marriage

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் (38) என்பவர் காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (30) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுக்க விரைந்து சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே தற்கொலை செய்துக்கொண்ட ராஜேஸ்வரியின் சகோதரர் காவல்துறையினரிடம் புகார் ஒன்று அளித்தார். அதில், “என்னுடைய அக்கா கடந்த 20ஆம் தேதி என்னிடம் செல்ஃபோனில் பேசினார். அப்போது அவருடைய கணவரும், அவருடைய அண்ணியும், ‘நீ வரும்போது என்ன கொண்டு வந்தாய், எங்கள் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கிறாய். நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்துவிட்டால் சொத்து முழுவதும் எனக்கே கிடைக்கும்’ என்று சொல்லிக் கொடுமைப்படுத்துகிறார்கள்’ எனக் கூறி அழுதார்.

மேலும் என் கணவரோ என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்று அவரின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி என்னை கொடுமைசெய்கிறார் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். அதன்பிறகு நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருக்கும்போதே என்னுடைய அக்கா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவருடைய இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close