உஷார்!! இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ! பணம் பறிக்கும் புது கும்பல்!

  முத்து   | Last Modified : 27 Jan, 2020 09:44 am
police-search-criminals-take-videos-woman-naked

தங்களை காவல்துறை என்று கூறிக் கொண்டு, ஒரு அப்பாவியை வைத்து ஆபாச படமெடுத்து பணம் பறித்து வந்த 2 பெண்கள் உள்ளிட்ட கும்பலை போலீஸ் தேடுகின்றனர். போலீஸ் எனக் கூறி மாமூல் அல்லது லஞ்சம் பெறும் கும்பலை கேள்விபட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் ஒரு கும்பல்,  தங்களைக் காவலர்கள்  எனக் கூறிக் கொண்டு விநோதமான முறையில் இளைஞரிடம் பணம் பறித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட அமர்ஜீத் சிங் என்பவர் பெராஸ்பூர் வந்தப் போது, அவருடன் அறிமுகமான ஒருவர் தான் அவசரமாக வெளியே செல்வதால் இளம்பெண் ஒருவரை அப்பெண்ணின் வீட்டில் விடும் படி கேட்டுக் கொண்டார்.

அவரோ உதவி தானே என நினைத்து அப்பெண் கூறிய முகவரி படி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பெண் தேநீர் கொடுக்கும் போது, திடீரென மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் அமர்ஜீத் சிங்கின் ஆடைகளை களைத்து, அவர் அழைத்து வந்த பெண்ணுடன் ஆபாசமாக இருக்க வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர்.

அதனை காட்டி மிரட்டிய அந்த கும்பல் அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் 4 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டனர். அவ்வப்போது போன் செய்யும் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் இல்லையெனில் அந்த புகைப்படம், வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டுவதாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் தீப்பு, டிங்கு ஆகிய 2 பெண்கள் உள்பட சுகா சிங், அமன்தீப் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். பின்னர், இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், பலரும் இது போல் இந்த கும்பலிடம் ஏமாந்து இருப்பது கண்டு அதிர்ந்தனர். உஷாரா இருந்துக்கோங்க... உதவி தானே என்று முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதைப் போலவே எந்த பிரச்சனையாக இருந்தாலும், தைரியமாக காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த சமூகத்திற்கு பயந்து பயந்து நீங்கள் இது போன்ற மோசடி கும்பலில் சிக்கிக் கொண்டு உங்களோட வாழ்க்கையை சீரழிக்காதீங்க!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close