ப.சிதம்பரத்திற்கு கல்தா கொடுத்த காங்கிரஸ்! நடிகைகள் குஷ்பு, நக்மாவுக்கு முக்கியத்துவம்!

  சாரா   | Last Modified : 23 Jan, 2020 03:33 pm
kushboo-overtakes-chidambaram

அடுத்த  மாதம் 8ம் தேதி டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் இருந்து 40 நட்சத்திரப் பேச்சாளா்களைக் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டிருந்தது.

தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரித்து, பாஜகவிற்கு எதிராக பேசி வாக்காளர்களை தங்கள் வசம் ஈர்க்கும் இந்த முக்கிய பணியில் இந்த 40 நட்சத்திர பேச்சாளர்களும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனா். மேலும், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பெயரை காங்கிரஸ் கட்சி நிர்வாகம் சேர்க்கவில்லை. இந்த பட்டியலில் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி கல்தா கொடுத்துள்ளது. 

நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்திருக்கும் ப.சிதம்பரத்தின் பெயரை இதில் சேர்த்து, வாக்கு சேகரிக்க அவர் சென்று கூட்டங்களில் பேசினால், வருகிற வாக்குகளும் சிதறி ஓடும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்ததால், ப.சிதம்பரம் பெயரை இந்த லிஸ்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே சேர்க்கவில்லை என்கிறார்கள் மேலிடத் தலைவர்கள்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, நடிகர் சத்ருகன் என இதற்கு முன்னால் பாஜகவில் இருந்தவர்கள் பெயர்கள் எல்லாம் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் ப.சிதம்பரம் முழுமையாக ஓரம் கட்டப்பட்டிருப்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close