நாளை முதல் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்

  சாரா   | Last Modified : 23 Jan, 2020 02:48 pm
special-train-for-chennai-to-coimbatore

சென்னை - கோவை இடையே, 'ஏசி' சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை - கோவை, கோவை - சென்னை இடையே அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்று வருவதால், இரவு நேரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரை சிறப்பு 'ஏசி' ரயில்  இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

                                                

மதியம், 2:00 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில் இரவு, 9:45 மணிக்கு கோவை சென்றைடையும். இந்த ரயில் காட்பாடி,சேலம்,ஈரோடு,திருப்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.அதிகாலை, 5:00 மணிக்குகோவையில் இருந்து புறப்படும் ரயில், மதியம் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் முற்றிலும், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close