ஹெல்மெட் போட முடியாது! போலீசை மிரட்டிய வாலிபரின் வைரல் வீடியோ!!

  சாரா   | Last Modified : 27 Jan, 2020 09:42 am
traffic-police-helmet-issue-kovai

தமிழகம் முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் வந்த பிறகு, போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களிடம் அதிக கெடுபிடி செய்வதாக பரவலான குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர், வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் பலரும் ஹெல்மெட் அணிவதை தலைச்சுமையாகவே கருதி வருகின்றனர். நமது பாதுகாப்புக்காக அணிவதே ஹெல்மெட் என்கிற விழிப்புணர்வு போதுமான அளவில் பொதுமக்களிடையே ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

இந்நிலையில், கோவை மாவட்டம் உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-சின்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முருகவேல் தலைமையிலான போலீசார், உக்கடம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர் ஒருவர் கடும் வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளார். 

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரை முருகவேல் மடக்கி விசாரித்த போது, அந்த வாலிபர், ‘நாங்கள் யார் தெரியுமா? எனக்கு அபராதம் விதித்து விட்டு உன்னால் இந்த இடத்தை விட்டு செல்ல முடியுமா?’ என்று மிரட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து நான் எங்களது இஸ்லாம் வாட்-அப் குரூப்பில் போட்டு விட்டால், உன்னை  ஆளே அடையாளம் தெரியாமல் செய்து விடுவார்கள் என்று மிரட்டியும், தகாத வார்தைகளைப் பயன்படுத்தியும் காவலரை திட்டியுள்ளார். 

வாலிபரின் இந்த மிரட்டல் போக்கு குறித்து முருகவேல், அவரை வீடியோ எடுக்க, பதிலுக்கு அந்த வாலிபரும் வீடியோ எடுத்துள்ளார். மேலும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டியுள்ளார்.

பின்னர், உக்கடம் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் குறித்து முருகவேல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், அந்த வாலிபர் பெயர் இஸ்மாயில் என்றும், அவர் தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதையும் கண்டறிந்த காவல்துறையில், அவரை கைது செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

‘நாங்க ஹெல்மெட் போட முடியாது, எங்களுக்கு ஜாமத் வைத்தது தான் சட்டம்’ என்று முஸ்லீம் வாலிபர் ஆவேசமாக பேசியது காவல் துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த காவலர்கள், கோவிலுக்குப் போனாலும் சரி, மசூதிக்குப் போனாலும் சரி... சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான். எல்லோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close