#BREAKING ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நியமனம் ரத்து! நீதிமன்றம் உத்தரவு!!

  சாரா   | Last Modified : 23 Jan, 2020 04:07 pm
ops-upset

தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ். தம்பி ஓ.ராஜா என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமாவாசை குற்றம் சாட்டினார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக செயல்பட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா செயல்பட  இடைக்கால தடை விதித்தது. மேலும் ஓ.ராஜா தலைமையிலான  இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் நீதிமன்றம் இடைக்கால  தடை  விதித்திருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. அப்பொழுது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட  நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரும் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவர்கள் அனைவரும் விதிகளின் படி தேர்தடுக்கப்படாததால் இவர்களின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் ஆணையர் விதிப்படி தற்காலிக மற்றும் நிரந்தர குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close