சென்னையில் பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டி விளையாடும் இளைஞர்.. வந்தது சிக்கல்..

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 07:09 am
chennai-youth-arrested-by-police-for-abusing-womens

பைக்கில் சென்றுகொண்டே நடந்து செல்லும் பெண்களின் பின்புறம் தட்டி குறும்பு செய்த  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூரில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அங்கு நடந்து சென்ற இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டி அநாகரீகமாக நடந்துக் கொண்டார். அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறம் தட்டும் போது அப்பகுதியினர் இளைஞரை மடக்கி பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் சேர்ந்தவர் சதீஷ்குமார்(30). கம்புயூட்டர் என்ஜீனியரான இவர் திருமணமானவர் என்பது தெரியவந்தது.  நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் பைக்கில் செல்லும் போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்திருப்பதாக தெரியவந்தது. பல பெண்களிடம் இந்த முறையில் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close