பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நேரில் கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில்.. 

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 07:23 am
man-arrested-for-molesting-girl

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வஉசி நகரைச் சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக மகேந்திரன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபோல் நேற்று முன்தினமும் அந்த மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் சென்று மகேந்திரனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்து மகேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close