கணவர் பலாத்காரம் செய்துட்டார்! அலறிய மனைவி! நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!!

  முத்து   | Last Modified : 25 Jan, 2020 02:28 pm
delhi-court-acquits-man-of-rape-says-woman-was-his-wife-on-that-day

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு, தனது கணவர் திருட்டு வழக்கில் சிறை சென்றவர் என்பது திருமணம் முடிந்த சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்துள்ளது. இதனால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனை அடுத்து டெல்லிக்கு வந்த கணவர், இனிமேல் திருடமாட்டேன், நான் தற்போது திருந்திவிட்டேன் எனக் கூறி மனைவியை சமாதானம் செய்துள்ளார். பின்னர் இருவரும் டெல்லியிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஒருநாள் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாயை கணவர் திருடியுள்ளார். இதனால் கணவர் மீது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே ஜாமினில் வெளியே வந்த கணவர், மனைவியின் வீட்டுக்கு சென்று அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பலாத்காரம் நடந்ததாக அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதனால் குற்றம்சாட்டப்பட்ட தேதியில் அவர் கணவர் அந்தஸ்தில் தான் இருந்துள்ளார். இதனால் இதற்கு பலாத்கார பிரிவின் கீழ் தண்டனை கொடுக்க முடியாது என கூறி கணவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close