‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி வீட்டில் புகுந்த இளைஞர் பகீர் செயல்!!

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 04:21 pm
man-sets-woman-s-house-on-fire-for-rejecting-his-proposal

பெண்ணை திருமணம் செய்துவைக்க மறுத்த ஆத்திரத்தில் அத்தை வீட்டுக்கு தீ வைத்துக் கொளுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது. ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் என்ற இளைஞர் தனது அத்தை சத்யாவதியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது அத்தையிடம் தெரிவித்து திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். ஆனால் சத்யாவதி பெண் தர மறுத்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறொருவருடன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த சீனிவாஸ் அத்தை சத்யாவதியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து சீனிவாஸ் மீது சத்யாவதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதனால் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சத்யாவதியின் வீட்டுக்கு சென்ற சீனிவாஸ் வீட்டின் கதவை வெளிபுறமாக பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி வீட்டைக் கொளுத்தியுள்ளார். அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.

அப்போது திடீரென வீட்டுகுள் தீ எரிவதைக் கண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். இதில் சத்யாவதியின் மகன் ராமு (18), சகோதரியின் மகள் விஜயலட்சுமி (5) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சத்யாவதி, சகோதரி துர்கா மற்றும் அவரது மகள்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் சத்யாவதி மற்றும் துர்கா ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சீனிவாஸை தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் தர மறுத்த ஆத்திரத்தில் அத்தையின் வீட்டை தீ வைத்துக் கொளுத்திய இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close