இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமல்

  முத்து   | Last Modified : 01 Feb, 2020 10:33 am
tamil-nadu-government-implement-one-nation-one-ration-scheme

தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாடு- ஒரே ரேஷன் திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக 16 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ராம்விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இது தொடர்பாக மண்டல இணைப் பதிவாளர்கள் வாரந்தோறும் பதிவாளருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close