நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்! பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்!

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 05:00 pm
woman-gang-raped-by-husbands-friends-they-tried-to-slit-her-throat

உத்தரபிரதேசத்தில் 5 பேர் நெருங்கிய நண்பர்களாக சிறு வயது முதலே பழகி வந்திருக்கிறார்கள். இவர்களில், ஒருவருக்கு திருமணம் நடந்தேறியது. மற்ற நான்கு நண்பர்களும், அவ்வப்போது நண்பனின் வீட்டிற்குச் சென்று வர இருந்தார்கள். பின்னர், நாளடைவில் மற்ற 4 நண்பர்களுக்கும் மூளையில் சாத்தான் புகுந்து கொண்டு, வினோதமான திட்டம் தோன்றியது.

அதன் படி இந்த நான்கு பேரும் சேர்ந்து கொண்டு, தங்களது பெஸ்ட் ப்ரெண்டை திட்டமிட்டு, போலீசில் சிக்க வைத்து விட்டு, நண்பனின் மனைவியை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவி மீதான ஆசையால், அவருடைய நண்பர்கள் கொடூர திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளனர்.  அதன்படி, போதை பொருள் கடத்தியதாக பொய் புகாரில் நண்பனை சிக்க வைத்த 4 பேரையும் அவரை திட்டமிட்டப்படி சிறைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் நண்பர்கள் 4 பேரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் தனியே இருந்த அவருடையை மனைவியை நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் அந்தப் பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே, வேறு வழியின்றி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்லும் போது இதுபற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். அதனால் பயந்து போன அந்தப் பெண் 2 நாட்கள் கழித்தே போலீசாரிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒன்றாக பழகி வந்த நண்பர்களே திட்டம் போட்டு சிறைக்கு அனுப்பி விட்டு மனைவியை சீரழித்த கொடூரம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close