ஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல்

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 09:06 am
admk-ravindranath-mps-car-attacked

தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடலில் அதிமுக சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்பகுதியில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில் அந்த வழியாக ரவீந்திரநாத் குமார்  எம்.பி வாகனம் சென்றபோது வழிமறித்து கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் எம்பி ரவீந்திரநாத் குமார் வாகனம் வேகமாக அந்த பகுதியில் இருந்து கடந்து சென்றது.

இத்தாக்குதலில் எம்பி கார் கண்ணாடி உடைந்தது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close