ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..! ...

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 09:40 am
bus-driver-arrested-as-he-misbehaved-with-a-school-girl

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று மாணவி சென்ற ஷேர் ஆட்டோ பாதி வழியில் பழுதாகி இருக்கிறது. அப்போது அந்த வழியில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த செஞ்சி குமார் என்பவர் மாணவியை பள்ளியில் விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் பைக்கை நிறுத்தி விட்டு மாணவியிடம் செஞ்சி குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல் போட்டிருக்கிறார். எனினும் கத்தியை காட்டி மிரட்டி மாணவியை தூக்கிச்சென்று செஞ்சி குமார் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடூமையை பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவலர்கள் செஞ்சி குமாரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close