16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! தொடரும் தெலங்கானா கொடூரம்!

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 05:55 pm
woman-abducted-and-raped

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வடு மாறுவதற்குள் தெலங்கானாவில் மீண்டும் ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது.

அமீன்பூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை பிடித்து திடீரென காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர், அமீன்பூர் வனப்பகுதிக்கு சென்று 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு  தப்பி ஓடிவிட்டனர்.

சில நொடிகளில் கடத்தப்பட்டு தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி அதிர்ச்சியடைந்தார். இதனிடையே ஒரு வழியாக அங்கிருந்து தப்பி சாலைக்கு வந்த சிறுமி, தொலைப்பேசி வாயிலாக நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அமீன்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அமீன்பூர் வனப்பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close