இந்த ஆண்டு சென்னைக்கு "நோ" தண்ணீர் பஞ்சம்

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 11:03 am
this-year-no-water-scarcity-in-chennai

இந்த ஆண்டு முதல்முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளவை எட்டியுள்ளதால், பாசனத்திற்கும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கும் ஏரிகளில் முக்கியமான ஏரி வீராணம் ஏரி; சரியாக மழை பொழிவு இல்லாததால் ஏரிகள் முழுகொள்ளவை எட்டுவது அரிதாகிறது. இதனால், சென்னை வாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், 2019ம் ஆண்டு பெய்த அதிக மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நூறு சதவீத மழை பொழிவு ஏற்பட்டது. இதனால், நீர்வரத்து அதிகமானதால் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, 9 முறை முழுக்கொள்ளவை எட்டியது. இதன் காரணமாக பாசனத்திற்கும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் கிடைத்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டில் வீராணம் ஏரி முதல்முறையாக முழுக்கொள்ளவான 47.5 அடியை எட்டியுள்ளது. அத்துடன், கீழணையில் இருந்தும் 582 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் மழை பொழிவு ஏற்பட்டால், குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும், வீராணம் ஏரி முழுக்கொள்ளவை எட்டியதால், சேத்தியார்தோப்பு அணைக்கு கிட்டத்தட்ட 412 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.  இதனால், கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close