இதோ பக்கத்துல வந்துட்டோம்! திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ!!

  முத்து   | Last Modified : 24 Jan, 2020 05:58 pm
sub-inspector-helped-theft-man-in-chennai

காவல்துறையினர் கைது செய்ய வருகிறார்கள் என திருடனுக்கு தகவல் கொடுத்து உதவிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் குருமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்தபோது, அங்கு மகேஷ் என்ற திருடனை பிடிக்க காவல்துறை மும்முரம் காட்டியது.

ஆனால் அவரை பிடிக்க போலீசார் நெருங்கும் போதெல்லாம் அதனை அறிந்து மகேஷ் தப்பி சென்றுவிடுகிறார். எனினும் ஒருநாள் கடுமையான முயற்சிக்குப்பின் மகேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில், உதவி ஆய்வாளர் குருமூர்த்தி மகேஷுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குருமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close